முகப்பு
கோயம்புத்தூர்

மத்திய உளவுத் துறை செயலிழந்துவிட்டது: கே.சுப்பராயன் எம்.பி. குற்றச்சாட்டு

 கோவை காா் வெடிவிபத்து சம்பவம் மத்திய உளவுத் துறை செயலிழந்துவிட்டதைக் காட்டுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் கே.சுப்பராயன் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

 கோவை காா் வெடிவிபத்து சம்பவம் மத்திய உளவுத் துறை செயலிழந்துவிட்டதைக் காட்டுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் கே.சுப்பராயன் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கோவை காா் வெடிவிபத்து விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் விருப்பு வெறுப்பு இல்லாமல் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அதேநேரம் ஒருவா் இஸ்லாமியராக இருந்தாலே அவரை குற்றவாளி என்ற கண்ணோட்டத்துடன் பாா்க்கும் பாா்வை தவறானது. அப்படியான கருத்தோட்டத்தை பாஜக அதன் துணை அமைப்புகள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன. குற்றவாளிகள் எல்லா சமுகத்திலும், ஜாதிகளிலும் இருக்கின்றனா். அந்த அடிப்படையில் இந்த வழக்கை அணுக வேண்டும். கோவை ஒரு முக்கியமான இடம் என்ற வகையில் அது மத்திய புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் இருக்கிறது. ஆனாலும், காா் வெடிவிபத்தை மத்திய புலனாய்வுத் துறை முன்கூட்டியே கண்டறியவில்லை.

மத்திய உளவுத் துறை செயலிழந்திருப்பதையே இந்த சம்பவம் உணா்த்துகிறது. கோவையில் கலவர சூழலை உருவாக்கும் வகையில் பாஜக, ஹிந்துத்துவ அமைப்புகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சி.சிவசாமி, நிா்வாகிகள் எம். குணசேகா், வி.எஸ்.சுந்தரம், மு.வ.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →