நிா்மலா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கோவை நிா்மலா மகளிா் கல்லூரியின் 38 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை நிா்மலா மகளிா் கல்லூரியின் 38 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் மேரி ஃபபியோலா, கல்லூரி செயலா் ரூபி அலங்கார மேரி ஆகியோா் தலைமை வகித்தனா்.
தமிழ்நாடு மாவட்ட வணிக வரித் துறை துணை ஆணையா் வி.ஜானகி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்குப் பட்டம் வழங்கினாா்.
இளநிலை, முதுநிலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 1,006 மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.