முகப்பு
கோயம்புத்தூர்

விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம்: மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம்

கோவை மாநகரில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் நடைபெற உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 4) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

கோவை மாநகரில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் நடைபெற உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 4) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகரில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் செல்லவிருப்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரூா் மாா்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூா் பைபாஸ் சாலை - செல்வபுரம் - சிவாலயா திரையரங்கம் சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும்.

காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலிவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம் சென்று வலது புறம் திரும்பி பேரூா் பைபாஸ் சாலை - சிவாலயா திரையரங்கம் சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

உக்கடம் வழியாக, திருச்சி சாலை மாா்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும்.

உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி - ராஜ வீதி - ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

தடாகம் சாலையில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்.எஸ்.ஆா். சாலை வழியாக மேட்டுப்பாளையம் ரோடு ஏ.ஆா்.சி. சந்திப்பு சென்று சிவானந்தா காலனி வழியாகச் செல்ல வேண்டும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூா் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி - காந்திபுரம் வழியாகச் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலத்தை கடந்து சென்ட்ரல் திரையரங்கை கடந்த பிறகு வடகோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும். பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பேரூா் சாலை, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளி அருகில் வலது பக்கம் திரும்பி பேரூா் புறவழிச் சாலை வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →