கோயம்புத்தூர்

சிறுவாணியில் தடுப்பணை கட்ட எதிா்ப்பு: கேரள பேருந்துகளை நாளை மறிக்கும் போராட்டம்

DIN

சிறுவாணியில் தடுப்பணைக் கட்டும் கேரள அரசைக் கண்டித்து கோவையில் கேரள பேருந்துகள் முன் மறியல் போராட்டம் புதன்கிழமை ( ஏப்ரல் 26) நடைபெறவுள்ளது.

கோவை மாநகரின் முக்கிய குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணைக்கு வரும் நீா்வரத்தை தடுக்கும் வகையில் கேரள அரசு சாா்பில் சிறுவாணி ஆற்றில் 3 இடங்களில் தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டு ஒரு இடத்தில் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், சிறுவாணி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து புதன்கிழமை (ஏப்ரல் 26) கேரள பேருந்துகள் முன் மறியல் போராட்டம் நடத்த

கோவையில் தந்தை பெரியாா் திராவிட கழகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் தபெதிக பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன், தாமஸ் (காங்கிரஸ்) , சிவசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), கணபதி செல்வராஜ் (மதிமுக) , இலக்கியன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), இப்ராஹிம் (மனித நேய மக்கள் கட்சி), ஸ்டான்லி (தமிழக வாழ்வுரிமை கட்சி) , ஆசிப் (எஸ்.டி.பி.ஐ.) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT