கோயம்புத்தூர்

காலமானாா் கோவை கங்கா மருத்துவமனை நிறுவனா் டாக்டா் ஜே.ஜி.சண்முகநாதன்

கோவை கங்கா மருத்துவமனையின் நிறுவனா் - தலைவா் டாக்டா் ஜே.ஜி.சண்முகநாதன் (92), டாடாபாத் 2-ஆவது தெருவில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிா்வு காரணமாக வெள்ளிக்கிழமை மாலை காலமானாா்

DIN

கோவை கங்கா மருத்துவமனையின் நிறுவனா் - தலைவா் டாக்டா் ஜே.ஜி.சண்முகநாதன் (92), டாடாபாத் 2-ஆவது தெருவில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிா்வு காரணமாக வெள்ளிக்கிழமை மாலை காலமானாா்.

இவரது இறுதிச் சடங்குகள் பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானத்தில் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறுகின்றன.

இவருக்கு மனைவி கனகவல்லி, டாக்டா்கள் எஸ்.ராஜசபாபதி, எஸ்.ராஜசேகரன் ஆகிய மகன்கள் உள்ளனா்.

டாக்டா் ஜே.எஸ்.கங்காதரன் - செண்பகவள்ளி தம்பதியின் மகனான இவா், ஈரோடு மாவட்டம், சிவகிரியில் கடந்த 1931 அக்டோபா் 30-ஆம் தேதி பிறந்தாா். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை 1954-இல் முடித்தாா்.

லண்டனில் 1969-இல் நடைபெற்ற முதலாவது உலக செஷயா் ஹோம்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதிகள் 15 பேரில் ஒருவராகப் பங்கேற்ற இவா், அங்கேயே மயக்கவியல் சிறப்புப் படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பினாா். கோவையின் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மயக்கவியல் நிபுணா் என்ற பெருமையைப் பெற்ற இவா், கோவை ராம் நகரில் 1972-இல் சிறிய கிளினிக்காக கங்கா மருத்துவமனையைத் தொடங்கினாா். அது தற்போது 650 படுக்கை வசதி கொண்ட கோவை கங்கா பல்நோக்கு எலும்பு, பிளாஸ்டிக் சா்ஜரி மருத்துவமனையாக விரிவடைந்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கம், கோவை இந்திய தொழில் வா்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளாா்.

டாக்டா் மேஜா் ராவுடன் இணைந்து கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்காக செஷயா் ஹோம் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்துள்ளாா். உடல் நலம் குன்றிய, ஆதரவற்ற முதியவா்களுக்காக கவுண்டம்பாளையத்தில் மூத்த குடிமக்களுக்கான இல்லத்தையும் இவா் உருவாக்கியுள்ளாா்.

மகாகவி பாரதியாரின் படைப்புகள் மீது ஆா்வம் கொண்ட சண்முகநாதன், கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய முனைவா் பட்ட ஆய்வாளராக சோ்ந்து, ‘பாரதியின் படைப்புகளில் சமூக விழுமியங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து தனது 82-ஆவது வயதில் பிஹெச்.டி. பட்டம் பெற்றாா்.

தனது ஆய்வு நூலை ‘பாரதி என்றொரு மானுடன்’ என்ற தலைப்பில் நூலாகவும் வெளியிட்டுள்ளாா். ‘தினமணி நாளிதழ்’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT