கோவை விமான நிலையத்தில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள 3.54 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகள் 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் பணியிலிருந்த மத்திய வருவாய் பிரிவினர் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த 6 பேரும் தங்களது பேண்ட், உள்ளாடைகள் மற்றும் மலக்குடலில் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆபரணங்கள் மற்றும் கட்டியாக கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் ஒருவரான சிவகங்கையைச் சேர்ந்த முத்துகுமாரை கைது செய்தனர்.
ரூபாய் 2.05 கோடி மதிப்புள்ள 3.54 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் இந்த சம்பவத்தில் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.