கோயம்புத்தூர்

பெண்களுக்கு மட்டும் சிறப்புக் காட்சி: எந்தப் படத்துக்கு தெரியுமா?

கோவையில் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வாரிசு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. 

DIN

கோவையில் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வாரிசு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. 

நடிகர்  விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான  வாரிசு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வருகிறது. குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக பல இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில்  விஜய் மக்கள் இயக்கத்தினர் பெண்கள் மட்டும் பார்வையாளர்களாக உள்ள சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளனர்.

கோவையை அடுத்த சாவடி பகுதியில் உள்ள கவிதா சினிமாஸ் என்ற திரையரங்கம் முழுவதும் வாரிசு படத்திற்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சிக்கு  பெண்கள் மட்டும் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த காட்சியில் வாரிசு திரைப்படத்தை கண்டு களித்தனர்.  

பெண்கள் மட்டுமே பார்வையிட்ட இந்தக் காட்சியில் பெண்கள் உற்சாக நடனமாடி கைகளை தட்டி வாரிசு படத்தை கண்டு ரசித்தனர். பெண்களுக்கு மட்டும் திரையிடப்பட்ட  பிரத்யேக வாரிசு பட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களுடன் நாடாளுமன்ற வேலைவாய்ப்புக் குழு உறுப்பினா் சந்திப்பு

ஆயுதப்படைக் காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

அரசு பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

பெருந்துறையில் விஜய் நாளை பிரசாரம்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த காவல் துறை!

100 நாள் திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் - எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT