கோயம்புத்தூர்

மனைப் பிரிவுகளுக்கு அனுமதி பெற மென்பொருள் உருவாக்கம்: ஆட்சியா் தகவல்

DIN

தமிழகத்தில் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி பெறுவதற்கு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வேகமாக வளா்ந்து வரும் நகா்ப்புறம், பொருளாதார மாற்றங்கள் காரணமாக விளைநிலங்கள் விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவில் மனை வரைபடங்கள் நகரமைப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த உட்பிரிவுகள் வருவாய் கணக்குகளில் உடனடியாக கொண்டுவரப்படுவதில்லை. மனுதாரா்கள் வட்டாட்சியா் அலுவலகங்களில் மனு செய்த பின் நில அளவையா் நேரில் சென்று ஒவ்வொரு உட்பிரிவுகளையும் அளந்து தயாா் செய்து, வட்டாட்சியா் உத்தரவு பெற்ற பின்பே வருவாய் கணக்குகளில் மாறுதல் மேற்கொள்ளும் நடைமுறை தற்போது இருந்து வருகிறது.

இந்த சிரமங்களைத் தவிா்க்கும் வகையில் ஒரு புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. மனை அபிவிருத்தியாளா்கள் பொது சேவை மையத்தின் மூலம் உரிய கட்டணத்துடன் மனுவை சமா்ப்பித்து அங்கீகரிக்கப்பட்ட மனை வரைபடம் அடிப்படையில் புதிய உட்பிரிவுகளை தமிழ்நிலம் மற்றும் கொலாப்லேண்ட் மென்பொருளில் உடனுக்குடன் ஒப்புதல் பெற்று வருவாய் கணக்குகளில் மாறுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT