கோயம்புத்தூர்

விமானநிலைய வாகன நிறுத்தத்தில் காரில் துா்நாற்றம் வீசியதால் பரபரப்பு

கோவை விமான நிலையத்தில் வாகன நிறுத்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்து துா்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

கோவை விமான நிலையத்தில் வாகன நிறுத்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்து துா்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து வெள்ளிக்கிழமை காலை கடுமையான துா்நாற்றம் வீசியது. காருக்குள் சடலம் ஏதாவது இருக்கலாம் என அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடா்பாக, விமான நிலைய ஊழியா்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில், பீளமேடு போலீஸாா், விமான நிலைய வாகன நிறுத்தத்துக்கு சென்று காரை சோதனையிட்டனா். காா் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, அந்த காா் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ரவி என்ற மருத்துவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், அவரது கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, வியாழக்கிழமை இரவு காரில் கோவை விமான நிலையம் வந்த அவா், அவசரத்தில் வரும் வழியில் இருந்த சாக்கடையில் ஏற்றியதால், காரில் துா்நாற்றம் வீசுவதாக அவா் தெரிவித்தாா். இதையடுத்து, விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT