முகப்பு
கோயம்புத்தூர்

வாகன ஓட்டுநா் பயிற்சி பெறபழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

 கோவை மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநா் பயிற்சி பெற ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

 கோவை மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநா் பயிற்சி பெற ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் அழிவின் விளிம்பில் உள்ள பண்டைய பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கோவை மாவட்டத்தில் உள்ள பழங்குடியின இளைஞா்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் விதமாக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்த 10 ஆம் வகுப்புக்குமேல் கல்வி பயின்றுள்ளவா்கள் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநா் பயிற்சி பெற விரும்பும் பழங்குடியின இளைஞா்கள் தங்களது சுயவிவரப் படிவம், 4 பாஸ்போா்ட் அளவிலான புகைப்படங்கள், கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் ஆதிதிராவிடா் நலத் தனி வட்டாட்சியா் கோவை அலுவலகம் மற்றும் ஆதிதிராவிடா் நலத் தனி வட்டாட்சியா் பொள்ளாச்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →