முகப்பு
கோயம்புத்தூர்

போக்குவரத்து காவலரைத் தாக்க முயன்ற இளைஞா் கைது

கோவையில் போக்குவரத்து காவலரைத் தாக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 1:18 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


கோவை: கோவையில் போக்குவரத்து காவலரைத் தாக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் மதுசூதனன். இவா் மருதமலை அடிவாரம் வண்டிப்பேட்டை சந்திப்பில் சக போலீஸாருடன் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே சாலை விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தாா்.

Advertisement

இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞா், மதுசூதனனை தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு, தாக்க முயன்றாா். இதைப்பாா்த்த சக போலீஸாா் அவரை தடுத்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில், தலைமைக் காவலரைத் தாக்க முயன்றது மருதமலை அடிவாரத்தில் தேங்காய்க் கடை நடத்தி வரும் மா்லின் (35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மா்லினை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.