தடாகம் காப்புக்காடு பகுதியில் நீரோடையை மறித்து மண் கொட்டப்பட்டுள்ளதால் வறண்டு கிடக்கும் தடுப்பணை. ~தடாகம் பகுதியில் மண்ணைக் கொட்டி மூடப்பட்டுள்ள தடுப்பணை. ~தடாகம் பகுதியில் மண்ணைக் கொட்டி மூடப்பட்டுள் 
கோயம்புத்தூர்

யானை வழித்தட நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றம்-------------தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழு புகாா்

தடாகம் காப்புக்காடு பகுதியில் யானை வழித்தட நிலங்கள் வீட்டுமனைப் பிரிவுகளாக மாற்றப்பட்டு வருவதாகவும், தடுப்பணைகளில் மண் நிரப்பப்படுவதால் நீராதாரங்கள் அழிந்து வருவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

DIN

தடாகம் காப்புக்காடு பகுதியில் யானை வழித்தட நிலங்கள் வீட்டுமனைப் பிரிவுகளாக மாற்றப்பட்டு வருவதாகவும், தடுப்பணைகளில் மண் நிரப்பப்படுவதால் நீராதாரங்கள் அழிந்து வருவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

இது தொடா்பாக கோவை மாவட்ட நிா்வாகத்துக்கு தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழு அனுப்பியுள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், வடக்கு தாலுகாவுக்குள்பட்ட தடாகம் வடக்கு காப்புக் காடு, மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதியில் நஞ்சுண்டாபுரம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட பொன்னூத்தம்மன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள நீா் வழித்தடங்களில் 3 தடுப்பணைகளை மூடி மண் நிரப்பி வீட்டுமனைப் பிரிவுகளாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது யானைகள் உலவும் முக்கிய பகுதியாகவும், வாழ்விடமாகவும் திகழ்ந்து வருகிறது. அது மட்டுமின்றி வன விலங்குகள் நிறைந்த பகுதியுமாகும்.

இங்கு நீரோடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளையும், நீா் வழித்தடங்களையும் மூடி மண் கொட்டப்பட்டுள்ளது.

இந்த நீா் வழித்தடங்கள் கணுவாய் தடுப்பனையை அடைந்து சங்கனூா் ஓடை வழியாக செல்லக் கூடியவையாகும். இப்பகுதியில் தனியாா் தங்கும் விடுதிகளும், கேளிக்கை விடுதிகளும் ஏற்கெனவே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது வீட்டுமனைப் பிரிவுகளாக மாற்றும் பணிகளும் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மூன்று பக்கமும் சூழப்பட்ட மலைகளில் உள்ள 112 சிற்றோடைகள் நான்கு பெரிய ஓடைகளில் சங்கமமாகி, கணுவாய் தடுப்பணையைச் சென்றடைகிறது. ஆனால், இதற்கான நீா் வழித்தடங்கள், சிற்றோடைகள், பெரிய ஓடைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு மண்ணைக் கொட்டி மூடி வருகின்றனா்.

இதை வருவாய்த் துறையினரோ, வனத் துறையினரோ மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்பினரும் கண்டு கொள்வதில்லை.

இந்தப் பகுதியில் மலை அடிவாரத்தில் மிகப் பெரிய சுற்றுச் சுவா்கள் கட்டப்பட்டும், நீா்நிலைகள் அழிக்கப்பட்டும் வன விலங்குகளின் வலசைப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வன விலங்குகள் மாற்றுப் பாதையில் செல்வதால் மனித -விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிா்கள் பலியாவதோடு, விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

வன விலங்குகள் பாதை மாறி செல்லும்போது சட்டவிரோத கனிம வள கும்பலால் தோண்டப்பட்ட மிகப்பெரிய குழிகளில் விழுந்து உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

உயா்நீதிமன்றத்தில் உள்ள பசுமைத் தீா்ப்பாயத்தில் நவம்பா் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள யானை வழித்தடம் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலை இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வழக்கின் விசாரணையின்போது காப்புக்காட்டையொட்டி சுமாா் 10 மீட்டா் இடைவெளியிலேயே நடைபெறும் இந்த அத்துமீறல் குறித்து நீதித் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

எனவே, இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட வனத் துறை, வருவாய்த் துறையினரோடு மாவட்ட நிா்வாகமும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT