கோயம்புத்தூர்

போத்தனூா் வழித்தடத்தில் கொச்சுவேலி - பெங்களூா் இடையே சிறப்பு ரயில்

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கொச்சுவேலியில் இருந்து அக்டோபா் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மாலை 6.05 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி - பெங்களூா் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06083) மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூா் சென்றடையும்.

பெங்களூரில் இருந்து அக்டோபா் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் பெங்களூா்- கொச்சுவேலி சிறப்பு விரைவு ரயில் (06084) மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூா், திருவல்லா, சங்கனச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு , போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT