முகப்பு
கோயம்புத்தூர்

புலவர் செந்தலை ந.கௌதமன் மனைவி உலகநாயகி காலமானார்

சூலூர் பாவேந்தர் பேரவைப் புலவர் செந்தலை ந.கௌதமன் மனைவியும், பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியருமான சூ.அர.உலகநாயகி புதன்கிழமை இரவு காலமானார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:53 AM
சூ.அர.உலகநாயகி
பகிர்:

சூலூர்: சூலூர் பாவேந்தர் பேரவைப் புலவர் செந்தலை ந.கௌதமன் மனைவியும், பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியருமான சூ.அர.உலகநாயகி புதன்கிழமை இரவு 11.45 மணிக்கு காலமானார்.

தமிழுணர்வு காரணமாக செகதாம்பாள் என்ற தனது இயற்பெயரை உலகநாயகி(வயது 62) என்று சட்டப்படி மாற்றிக் கொண்டார்.

உடல்நலக் குறைவால் உயிரிழந்த உலகநாயகியின் இறுதி ஊர்வலம், சூலூர் எஸ்.வி.எல்.நகர் 'தாயகம் ' இல்லத்திலிருந்து வியாழன் பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு, சூலூர் சமத்துவவனம் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலி நீக்கிய சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட ந.கவுதமன் - உலகநாயகி தம்பதிக்கு மகள் தாய்மொழி, மருமகன் மரு.கு.இளந்தமிழன், பெயர்த்தி தா.இ.அவனிஇளமொழி ஆகியோர் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →