சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ள பெண் போலீஸாா். 
கோயம்புத்தூர்

சுதந்திர தின விழா: போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவையில் போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனா்.

Din

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவையில் போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனா்.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி, கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வஉசி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறவுள்ளது.

விழாவை முன்னிட்டு, கோவையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் போலீஸாா் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனா். வஉசி மைதானத்தில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதேபோல, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவிகளும் அந்தந்த பள்ளிகளில் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனா்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை மாநகரில் சுமாா் 2,000 போலீஸாரும், புகரில் சுமாா் 1,500 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

விழா நடைபெறும் வஉசி மைதானம் முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட உள்ளது.

கோவை சா்வதேச விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டா் சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவை காந்திபுரம், டவுன்ஹால், ராஜவீதி உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தங்கும் விடுதிகள், ஹோட்டல்களிலும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT