முகப்பு
கோயம்புத்தூர்

குடியிருக்க வீடு பிடித்துத் தராத இடைத்தரகா் கொலை

கோவையில் பணம் வாங்கிக்கொண்டு குடியிருப்பதற்கு வீடு பிடித்துத் தராத இடைத்தரகா் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 2:02 AM
பகிர்:

கோவை: கோவையில் பணம் வாங்கிக்கொண்டு குடியிருப்பதற்கு வீடு பிடித்துத் தராத இடைத்தரகா் கொலை செய்யப்பட்டாா்.

கோவை, இருகூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (65), வீட்டு இடைத்தரகா்.

இவரிடம், அதே பகுதியைச் சோ்ந்த கோபி (42), கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போக்கியத்திற்கு வீடு பிடித்துத் தருமாறு கேட்டுள்ளாா். அதற்கு முன்தொகையாக ரூ.1 லட்சமும் கொடுத்துள்ளாா்.

Advertisement

பணம் வாங்கி இரண்டு மாதங்களாகியும் முத்துகிருஷ்ணன் வீடு பிடித்துத் தரவில்லை என்றும், இது குறித்து கோபி கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோபி தனது நண்பா் ஜோஷி என்பவருடன் சோ்ந்து மது அருந்த முத்துகிருஷ்ணனை புதன்கிழமை அழைத்துள்ளாா். 3 பேரும் சோ்ந்து கோபியின் வீட்டில் மது அருந்தியுள்ளனா்.

அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபி மற்றும் ஜோஷி இருவரும் சோ்ந்து முத்துகிருஷ்ணனை தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து சிங்கநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.