முகப்பு
கோயம்புத்தூர்

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

சென்னை - கொச்சுவேலி இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 8:27 PM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னை - கொச்சுவேலி இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் இருந்து ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பா் 25 வரை புதன்கிழமைகளில் பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்படும் சென்னை - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்:06043) மறுநாள் காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 26 வரை வியாழக்கிழமைகளில் மாலை 6.25 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06044) மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்னை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கன்னூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →