கோயம்புத்தூர்

எல்.ஹெச்.பி. பெட்டிகளுடன் கோவை - மயிலாடுதுறை ரயில் இயக்கம்

Din

கோவை - மயிலாடுதுறை இடையே இயக்கப்பட்டு வரும் ஜன் சதாப்தி விரைவு ரயில் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் எல்.ஹெச்.பி.

பெட்டிகளுடன் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரயில் (எண்:12084) செவ்வாய்க்கிழமைகள் தவிர கோவையில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 1.45 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடைகிறது.

மறுமாா்க்கமாக, மயிலாடுதுறை - கோவை ஜன் சதாப்தி விரைவு ரயில் (எண்:12083) செவ்வாய்க்கிழமைகள் தவிர மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்பட்டு அன்றைய இரவு 9.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது.

இந்த ரயிலானது, வரும் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் எல்.ஹெச்.பி. பெட்டிகளுடன் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT