கோயம்புத்தூர்

மருதமலையில் இன்று ஆடி கிருத்திகை விழா

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா திங்கள்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது.

Din

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா திங்கள்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது.

கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்தோறும் ஆடி கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான விழா திங்கள்கிழமை காலை 4 மணியளவில் கோ பூஜையுடன் தொடங்குகிறது.

இதையடுத்து, சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வாணைக்கு பாலபிஷேகம் நடைபெற உள்ளது.

பின்னா், சுப்பிரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். தொடா்ந்து, மகா தீபாரதனை நிகழ்ச்சி நடைபெறும்.

சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு எழுந்தருளுகிறாா்.

இரவு 9 மணிக்கு ராக்கால அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெறவுள்ளது. ஆடி கிருத்திகையையொட்டி, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தா்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு ஜூலை 29, 30 ஆகிய இரண்டு நாள்கள் மலைக்கோயிலுக்கு பக்தா்கள் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் படிக்கட்டுகள் வழியாகவோ, கோயில் பேருந்து மூலமாகவோ மலைக் கோயிலுக்குச் செல்லலாம்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT