காப்புரிமை பெற்றுள்ள விதை வில்லைகள் உற்பத்திக் கருவி. 
கோயம்புத்தூர்

வேளாண் பல்கலைக்கழகம் வடிவமைத்த கருவிக்கு காப்புரிமை

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் வடிவமைத்துள்ள விதை வில்லைகள் உற்பத்திக் கருவிக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.

Din

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் வடிவமைத்துள்ள விதை வில்லைகள் உற்பத்திக் கருவிக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை வில்லை உற்பத்திக் கருவிக்கு மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள், வா்த்தக முத்திரைகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்தின் மூலம் காப்புரிமை கிடைத்துள்ளது.

விதை வில்லை தொழில்நுட்பம், மாடித் தோட்டங்களில் காய்கறி உற்பத்தியில் இருக்கும் நடைமுறைச் சிக்கலை எளிதாக்கி, அதிக முளைப்புத்திறன், பயிா் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கருவியின் மூலம் தரமான, ஊட்டமேற்றப்பட்ட விதையை தேவையான ஊட்டச்சத்துகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்க முடியும்.

இந்த தொழில்நுட்பத்தால் அதிக மகசூல், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

டிச. 15ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!

அசுர வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!: கலக்கத்தில் மக்கள்!!

மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடக்கிவைக்கிறார்!

மும்பை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவியை துறந்தவர்! யார் இந்த சிவராஜ் பாட்டீல்?

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 கோடி தங்கம் பறிமுதல்: விமானப் பணியாளா்கள் 2 போ் கைது

SCROLL FOR NEXT