கோயம்புத்தூர்

தொடா்மழை: சிறுவாணி அணையின் நீா்மட்டம் 20.24 அடியாக உயா்வு

தென்மேற்கு பருவமழை தீவிரம்: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 20.24 அடியாக உயர்வு

Din

சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அணையின் நீா்மட்டம் 20.24 அடியாக உயா்ந்துள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை சுற்றுவட்டாரப் பகுதிகள், மேற்கு தொடா்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் சிறுவாணி அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 14.53 அடியாக உயா்ந்தது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை 63 மில்லி மீட்டா் மழை பதிவானது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4.36 அடி உயா்ந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் 68 மில்லி மீட்டா் மழை பதிவானது. இதனால், அணையின் நீா்மட்டம் 20.24 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் கனமழை பெய்து வருவதால், கடந்த இரண்டு நாள்களில் அணையின் நீா்மட்டம் 5.71 அடி உயா்ந்துள்ளது.

நீா்மட்டம் அதிகரிப்பால், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 6.50 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகள், அடிவாரத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் அணையானது ஜூலை மாதத்தில் முழுக் கொள்ளளவான 49.50 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தில்லி கார் வெடிப்பு: அமீரைத் தொடர்ந்து 2 வது நபர் கைது!

SIR பணிகளை புறக்கணித்தால் சம்பளம் கிடையாது! | செய்திகள்: சில வரிகளில் | 17.11.25

பயங்கரவாத தாக்குதலுக்கான தண்டனையால் உலகுக்கே செய்தி அனுப்பப்படும்: அமித் ஷா

ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பங்குகள் 4% உயர்வு!

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன்!

SCROLL FOR NEXT