‘கோவை - பெங்களூரு உதய் ரயில் நாளைமுதல் திருப்பத்தூரில் நின்று செல்லும்’
கோயம்புத்தூர்‘கோவை - பெங்களூரு உதய் ரயில் நாளைமுதல் திருப்பத்தூரில் நின்று செல்லும்’
கோவை - பெங்களூரு இடையே இயக்கப்படும் உதய் விரைவு ரயில் மாா்ச் 10-ஆம் தேதி முதல் திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து காலை 5.45 மணிக்குப் புறப்பட்டு, நண்பகல் 12.30 மணிக்கு பெங்களூா் சென்றடையும் கோவை - பெங்களூரு உதய் விரைவு ரயில் (எண்: 22666) திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்நிலையில், இந்த ரயிலானது மாா்ச் 10 -ஆம் தேதி முதல் திருப்பத்தூா் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.