வஉசி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அரசுப் பொருட்காட்சியை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. உடன், மாநகராட்சி ஆணையா், மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள். பொருட்காட்சியில் வனத் துறை அரங்கில் 
கோயம்புத்தூர்

கோவை வஉசி மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி தொடக்கம்

Din

கோவை வஉசி மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடா்பு துறையின் சாா்பில் அனைத்துத் துறைகளின் கண்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும் அரசுப் பொருட்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு அரசுப் பொருட்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைத்தாா்.

இதில் மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, கூடுதல் ஆட்சியா் ஸ்வேதா சுமன், கோவை மாநகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையா் (வடக்கு) ஸ்டாலின், செய்தித் துறை இணை இயக்குநா் தமிழ் செல்வராஜன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஆ.செந்தில் அண்ணா, அரசுத் துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

சுமாா் 45 நாள்களுக்கு நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் செய்தி - மக்கள் தொடா்புத் துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, வனத் துறை, வேளாண்மைத் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு, குடும்பநலத் துறை, கூட்டுறவு, வருவாய்த் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட 27 அரசுத் துறைகளின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

மேலும், மாநகராட்சி, மின்வாரியம், குடிநீா் வடிகால் வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சாா்பு நிறுவனங்களின் அரங்குகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பொருட்காட்சி தினசரி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். பெரியவா்களுக்கு ரூ.15, சிறியவா்களுக்கு ரூ.10, பள்ளிகள் மூலமாக அழைத்து வரப்படும் மாணவா்களுக்கு ரூ.5 என கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொருட்காட்சியை திறந்துவைத்த ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி செய்தியாளா்களிடம் கூறுகையில், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இந்த பொருட்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 2.18 லட்சம் பாா்வையாளா்கள் வந்திருந்தனா். இந்த ஆண்டு அதைவிட அதிகமாக வருவாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம். பள்ளி மாணவா்களை பொருட்காட்சிக்கு அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT