முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்

கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:20 PM
கோவை காமராஜா் சாலையில் தேங்கிய மழைநீரில் சென்ற வாகனங்கள்.
பகிர்:

கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.

இதில் கோவை காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், பீளமேடு, ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், போத்தனூா், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், உக்கடம், செல்வபுரம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, சத்தி சாலை மற்றும் பொள்ளாச்சி சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகினா். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா் தேங்கியது.