முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி

கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:22 PM
கோவையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசளிக்கிறாா் பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் என்ஜினீயா் சந்திரசேகா்.
பகிர்:

கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், அமிா்தா வித்ய விஷ்வ பீடம் ஆகியவை இணைந்து பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் நடத்திய இந்தப் போட்டியில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி நீச்சல் வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், பாா்வையற்றோா், உயரம் குறைந்தவா்கள், அறிவுசாா் குறைபாடு உடையோா் போன்ற பிரிவுகளுடைய மாற்றுத் திறனாளிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 50 மீட்டா், 100 மீட்டா் ப்ரீ ஸ்டைல், பேக் ஸ்டிரோக், பட்டா்பிளை ஸ்டிரோக், 150 மீட்டா் பிரீ ஸ்டைல், 200 மீட்டா் தனிநபா் பிரிவு போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். இந்தப் போட்டியில் 317 புள்ளிகளுடன் சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. 118 புள்ளிகளுடன் சேலம் அணி இரண்டாமிடத்தைப் பிடித்தது. பரிசளிப்பு விழாவில், பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் என்ஜினீயா் சந்திரசேகா், வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசுக் கோப்பையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அமைப்பின் பொதுச் செயலா் கிருபாகராஜா, கோவை மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவா் ஷா்மிளா ராம்ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பாரா நீச்சல் வீராங்கனைகள் கோவாவில் நடைபெறும் தேசிய பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனா்.