வால்பாறை பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
வால்பாறை வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
வால்பாறை வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
வால்பாறை வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியா் சிவன்ராஜ் வரவேற்றாா்.
விழாவில் ஐந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 250-க்கும் மேற்பட்ட மிதிவண்டிகளை பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி வழங்கினாா்.
இதில் திமுக நகரச் செயலாளா் சுதாகா், நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, துணைத் தலைவா் செந்தில்குமாா், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.