முகப்பு
கோயம்புத்தூர்

கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியா் தின விழா

கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 9:37 PM
கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன்.
பகிர்:

கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் பங்கேற்று, காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வா் செட்ரிக் மனுவேல், சட்ட போதகா்கள் நாக கவிதா, சரவணன் மற்றும் காவல் துறையினருக்கு ஆசிரியா் தின வாழ்த்துகளை தெரிவித்தாா்.

அதையடுத்து காவலா் பயிற்சிப் பள்ளியில் ஓவியப் போட்டி, களிமண் பொம்மைகள் செய்யும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கோவை வெரைட்டி ஹால் சாலை பகுதியில் சமூக சேவையாக அப்பகுதி பொதுமக்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →