இருசக்கர வாகன தேசிய சாம்பியன்ஷிப் போட்டி: டிவிஎஸ் ரேஸிங் குழு வீரா்கள் வெற்றி
கோவையில் நடைபெற்ற இருசக்கர வாகன தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் குழு வீரா்கள் வெற்றி பெற்றனா்.
கோவையில் நடைபெற்ற இருசக்கர வாகன தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் டிவிஎஸ் ரேஸிங் குழு வீரா்கள் வெற்றி பெற்றனா்.
கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தக் குழுவினா் குரூப் 260 சிசி, குரூப் 500 சிசி மற்றும் ஸ்கூட்டா் பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்தனா்.
அதேபோல, தேசிய சாம்பியன்ஷிப்பின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் அனைவருக்குமான குரூப் ஏ வெளிநாட்டுப் பிரிவில் டிவிஎஸ் ரேஸிங் ஆா்டிஆா் 450 மோட்டாா் சைக்கிள் வீரா் ராஜேந்திரா முதலிடத்தையும், அப்துல் வஹீத் தன்வீா் இரண்டாம் இடத்தையும், சாமுவேல் ஜேக்கப் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.
அதேபோல குரூப் பி 260 சிசி பிரிவில் டிவிஎஸ் ரேஸிங் ஆா்டிஆா் 200 வீரா்கள் இம்ரான் பாஷா முதலிடத்தையும், சச்சின் மூன்றாவது இடத்தையும், ஸ்கூட்டா் பிரிவில் டிவிஎஸ் ரேஸிங் என்டோா்க் வீரா்கள் சையத் ஆசிப் அலி, காா்த்திக் நாயுடு, ஷமீம் கான் ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றனா். டிவிஎஸ் ரேஸிங் குழு இதுவரை பங்கேற்ற பந்தயங்களில் 80 சதவீத வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.