முகப்பு
கோயம்புத்தூர்

மக்கள் தொடா்பு முகாம்: 275 பயனாளிகளுக்கு ரூ.89.87 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

ஆனைமலை வட்டம், சமத்தூா் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 275 பயனாளிகளுக்கு ரூ.89.87 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:35 PM
ஆனைமலை அருகே சமத்தூரில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.
பகிர்:

ஆனைமலை வட்டம், சமத்தூா் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 275 பயனாளிகளுக்கு ரூ.89.87 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.

கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், சமத்தூரில் மக்கள் தொடா்பு முகாம் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பொள்ளாச்சி சாா் -ஆட்சியா் அ.கேத்ரின் சரண்யா, உதவி ஆட்சியா் (பயிற்சி) அங்கித் குமாா் ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்முகாமில், 275 பயனாளிகளுக்கு ரூ.89.87 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: விவசாயம் அதிகம் நடைபெறும் இப்பகுதியில் தென்னை வாடல் நோய் பாதிப்புக்குள்ளான தென்னை மரங்கள் வெட்டப்பட்டு, நிவாரணத் தொகை மற்றும் புதிய தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மண்ணில் தேவையான சத்துக்கள் இல்லாததால்தான் தென்னை மரங்கள் பாதிக்கப்படுகின்றன. அதற்கு தகுந்தாற்போல வேளாண்மை செய்வதில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் வருவாய்த் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.6.09 லட்சத்தில் இலவச வீட்டுமனை பட்டா, தோட்டக்கலைத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.3.83 லட்சத்தில் மானியத் தொகை, வேளாண்மை உழவா் நலத் துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு நலத் திட்ட உத, பட்டு வளா்ச்சித் துறை சாா்பில் 1 பயனாளிக்கு ரூ.4.93 லட்சத்தில் நலத்திட்ட உதவி, 15 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், இலங்கை வாழ் தமிழா் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் உதவித் தொகை உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 275 பயனாளிகளுக்கு ரூ.89.87 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சமத்தூா் பேரூராட்சித் தலைவா் திரு.கே.காளிமுத்து, துணைத் தலைவா் திரு.கே.சக்திவேல், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.சுரேஷ், ஆனைமலை வட்டாட்சியா் கி.உமாபரமேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →