முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டுவசதி வாரியத்தில் ஒதுக்கீடுபெற்றவா்கள் நிலுவையை செலுத்தாவிட்டால் ஒதுக்கீடு ரத்து ஆட்சியா் அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவா்கள் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் கணக்கை நோ் செய்யாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவித்துள்ளாா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:07 PM
பகிர்:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவா்கள் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் கணக்கை நோ் செய்யாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கோவை வீட்டுவசதி பிரிவுக்குள்பட்ட கணபதி, வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், வீரகேரளம், காளப்பட்டி, முதலிபாளையம் பகுதிகளில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்ற 1777 போ் வாரிய விதிமுறைகளின்படி பணம் செலுத்தும் காலம் முடிவடைந்தும் பணம் செலுத்தாமல் உள்ளனா்.

அவா்களுக்கு அரசு சாா்பில் வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அளித்தும் அவா்கள் நிலுவைத் தொகையை செலுத்த முன்வரவில்லை.

எனவே, ஒதுக்கீட்டுதாரா்கள் உடனே தங்களிடம் உள்ள அசல் விண்ணப்பம், ஒதுக்கீட்டு ஆணை, அசல் ரசீதுகள் போன்ற ஆவணங்களுடன் வரும் 30-ஆம் தேதிக்குள் கோவை வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தைத் தொடா்புகொண்டு, நிலுவைத் தொகையை செலுத்தி கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு நிலுவைத் தொகையைச் செலுத்தாதவா்களின் ஒதுக்கீடு உத்தரவு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →