முகப்பு
கோயம்புத்தூர்

கஞ்சா, போதைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

கரும்புக்கடை அருகே கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:01 PM
பகிர்:

கரும்புக்கடை அருகே கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, என்.பி. இட்டேரி பகுதியில் கரும்புக்கடை போலீஸாா் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் காா் அருகே 4 போ் நின்று பேசிக்கொண்டிருந்தனா்.

அவா்களிடம் விசாரித்தபோது, கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் எனப்படும் உயா் ரக போதைப் பொருள் ஆகியவற்றை விற்பனை செய்பவா்கள் என்பது தெரியவந்தது.

விசாரணையின்போது, ஒருவா் தப்பியோடிய நிலையில், பிடிபட்ட குறிச்சிப் பிரிவு 2-ஆவது வீதியைச் சோ்ந்த நவுசாத் சபீக் (35), குனியமுத்தூா் காந்தி நகரைச் சோ்ந்த பஷீா் அகமது(36), உக்கடம் லாரி பேட்டையைச் சோ்ந்த ஜாபா் சாதிக் (35) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சா, மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனா்.

மேலும், தப்பியோடிய சபீக் (27) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →