முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் ரெளடியை சுட்டுப் பிடித்த போலீஸ்!

கோவையில் ரெளடியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது பற்றி...

Updated On : 21 செப்டம்பர், 2024 at 3:22 AM
ஆல்வின்
பகிர்:

கோவை: கோவையில் தலைமறைவாக இருந்த ரெளடியை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் போலீஸார் சனிக்கிழமை அதிகாலை சுட்டிப் பிடித்தனர்.

ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சேர்ந்த ஆல்வின் என்ற ரெளடி.

இந்த நிலையில், கோவை கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தை தொடர்ந்து, அவரை பிடிக்க ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் அங்குச் சென்றனர்.

ஆல்வினை போலீஸ் பிடிக்க முயற்சித்த போது, தலைமை காவலர் ராஜ்குமார் என்பவரின் இடது மணிக்கட்டுப் பகுதியில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி தப்பிக்க முயற்சித்துள்ளார்.

மருத்துவனனையில் சிகிச்சைப் பெறும் ஆல்வின்.

இதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காக ஆல்வினின் இரண்டு கால் முட்டிகளிலும் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.

தற்போது, ஆல்வினை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →