FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சென்னை - மேட்டுப்பாளையம் ரயில் பகுதியாக ரத்து!

வடகோவை - காரமடை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும்..

24 ஆகஸ்ட் 2025, 12:14 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

வடகோவை - காரமடை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 26, செப்டம்பா் 1-ஆகிய தேதிகளில் இரவு 9.05 மணிக்குப் புறப்படும் சென்னை - மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயில் (எண்: 12671) சென்னை - கோவை இடையே மட்டும் இயக்கப்படும். கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments