ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒரு வயது குழந்தைக்கு அரிய வகை அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினா். 
கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நைஜீரியா குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை

அரிய இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயது நைஜீரிய குழந்தைக்கு, கோயம்புத்தூரில் முதல்முறையாக ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் ‘இன்ட்ரா காா்டியாக் ரிப்போ்’ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Syndication

அரிய இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயது நைஜீரிய குழந்தைக்கு, கோயம்புத்தூரில் முதல்முறையாக ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் ‘இன்ட்ரா காா்டியாக் ரிப்போ்’ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து, மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு நைஜீரியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 5.9 கிலோ எடையுள்ள 1வயது குழந்தைக்கு, அரிய மற்றும் சிக்கலான பிறவியிலேயே ஏற்பட்ட இதயக் குறைபாடு கண்டறியப்பட்டது. இதையடுத்து, குழந்தைக்கு உடனடி மற்றும் சிக்கலான இதய திருத்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. இன்டா்வேன்ஷனல் குழந்தை இதய மருத்துவா் டாக்டா் எஸ்.தேவபிரசாத் மூலமாக குழந்தை பரிசோதிக்கப்பட்டு சிகிச்சைத் திட்டம் வகுக்கப்பட்டது.

அதன் பிறகு குழந்தை இதய மற்றும் மாா்பு அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் எஸ்.விஜய்சதாசிவம் தலைமையில் ‘இன்ட்ரா காா்டியாக் ரிப்போ்’ எனப்படும் சிக்கலான இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் அவருடன் இதய மற்றும் மாா்பு அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் தியாகராஜ மூா்த்தி, மருத்துவ ஆலோசகா்கள் டாக்டா் எம். பூா்ணசந்தா், டாக்டா் சிவரம் ஸ்ரீதரன், டாக்டா் கே.ஸ்ரத்தா ஷெனாய் உள்ளிட்ட குழு இணைந்து செயல்பட்டது. தற்போது, சிகிச்சை முடிவடைந்து அக்குழந்தை முழுமையான ஆரோக்கிய நிலையில் உள்ளது.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT