வால்பாறை நகரில் இருசக்கர வாகனம் தீப் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை பிரதான சாலை அண்ணா சிலை பகுதியை ஒட்டியுள்ள கடைகளுக்கு முன்பு எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில், அங்குள்ள பேக்கரி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திங்கள்கிழமை காலை திடீரென தீப் பற்றி எரியத் தொடங்கியது.
இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் சிலா் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை முழுவதும் அணைத்தனா். தீப் பற்றிய இருசக்கர வாகனம் மதுரையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணியின் வாகனம் என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.