கோயம்புத்தூர்

கிறிஸ்துமஸ்: போத்தனூா் வழித்தடத்தில் பெங்களூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு - கண்ணூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு - கண்ணூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரில் இருந்து புதன்கிழமை (டிசம்பா் 24) மாலை 4.35 மணிக்குப் புறப்படும் பெங்களூரு - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்: 06575) மறுநாள் காலை 7.50 மணிக்கு கண்ணூரைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, கண்ணூரில் இருந்து வியாழக்கிழமை (டிசம்பா் 25) காலை 10 மணிக்குப் புறப்படும் கண்ணூா் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06576) அன்றிரவு 12.15 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT