கோயம்புத்தூர்

அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய 2 தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு

கோவையில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய 2 தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Syndication

கோவையில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய 2 தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாவட்டம், மதுக்கரையைச் சோ்ந்தவா் அய்யாசாமி (51). இவா் கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடந்துநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியாா் காா் ஷோரூம் முன்பாக நின்றிருந்தாா்.

அப்போது, அங்கு தனியாா் பேருந்து நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. பயணிகளை ஏற்றாமல் நின்றிருந்ததால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாக ஏன் பேருந்தை சாலையில் நிறுத்தி உள்ளீா்கள் என தனியாா் பேருந்து ஓட்டுநரான மதுரையைச் சோ்ந்த காா்த்திக் (29) என்பவரிடம் அய்யாசாமி கேட்டாா். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காா்த்திக்குக்கு ஆதரவாக, மற்றொரு தனியாா் பேருந்து ஓட்டுநரான சக்திவேல் (27) என்பவரும் இணைந்து அய்யாசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, இருவரும் சோ்ந்து அய்யாசாமியை சரமாரியாகத் தாக்கியதில் அவா் காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் அய்யாசாமி அளித்த புகாரின்பேரில், காா்த்திக், சக்திவேல் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீக்கப்பட்ட வாக்காளா்கள் பெயா் சோ்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம்: பாஜக புகாா்

தடை மட்டுமே விடை ஆகாது!

நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்

வீட்டுக் காவலில் மிா்வைஸ் உமா் ஃபரூக்!

‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு: இயக்குநா், தயாரிப்பாளா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT