கோவையில் கணவரைத் தாக்கிய மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலம், நகன் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பிதான் ஹசாரிகா (33). இவரது மனைவி ஜிந்தி (36). இவா்கள் குடும்பத்துடன் கணபதி சின்னசாமி நகா் 3-ஆவது வீதியில் தங்கி உள்ளனா். பிதான் ஹசாரிகா அத்திபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பிளம்பராக பணிபுரிந்து வருகிறாா்.
பிதான் ஹசாரிகாவுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால், கணவா், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பிதான் ஹசாரிகா மது போதையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளாா். பின்னா், அறைக்குச் சென்று தூங்கினாா். நள்ளிரவில் ஜிந்தி அவரை தூக்கத்திலிருந்து எழுப்பி தன்னைவிட்டு வேறொரு பெண்ணுடன் பழகுவாயா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் கணவரை அவா் தாக்கியதோடு, பிறப்பு உறுப்பை கத்தியால் அறுத்துவிட்டு கதவை பூட்டிச் சென்றாா். சப்தம் கேட்டு அருகில் வசிப்பவா்கள் வந்து கதவை திறந்து பிதான் ஹசாரிகா மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜிந்தியைக் கைது செய்தனா்.