மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமாா் ஏடிஜிபியாகவும், கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.
தமிழக காவல் துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 34 பேருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு மண்டல ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த டி.செந்தில்குமாா் டிஜிபி அலுவலக தலைமையிட ஏடிஜிபியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா்.
கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த ஆ.சரவணசுந்தா் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகப் பதவி உயா்வு பெற்றுள்ளாா்.