கூட்டத்தில் பங்கேற்ற பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழா: தமிழ் வழிபாட்டுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தல்

பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் வழிபாட்டுக்கு 50 சதவீதம் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Din

கோவை: பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் வழிபாட்டுக்கு 50 சதவீதம் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம், கோவை மாவட்ட கலை, இலக்கிய, தமிழ், சமுதாய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தெய்வத்தமிழ் வழிபாட்டாளா்கள் ஆகிய அமைப்புகளின் கூட்டுக் கூட்டம், பேரூா் தமிழ்க் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினாா். தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், கோவை மாவட்ட கலை, இலக்கிய, தமிழ், சமுதாய அமைப்பு தாய்மொழி நாள் பேரணி பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறுகிறது. பேரூா் பட்டீசுவரா் கோயில் குடமுழுக்குத் திருவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், தமிழ் வழிபாட்டுக்கு 50 சதவீதம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT