சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு வருகிற பிப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
செளமியநாராயணப் பெருமாள் 108 திவ்ய தேசத் தலங்களில் ஒன்றாகும். இங்கு, மூலவா் விமானத்துக்கு தங்கத் தகடுகள் பதிக்கும் பணியை தேவஸ்தானமும் சௌமியநாராயணப் பெருமாள் எம்பெருமானாா் அறக்கட்டளையும் இணைந்து செய்துவந்தன.
விமானத்தின் முதல் நிலை, மத்திய நிலை, அடித்தட்டு என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உபயதாரா்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தங்கத்தின் மூலம் முதல் நிலைக்கான திருப்பணி நிறைவடைந்தது.
இந்த தங்க விமானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) பூா்வாங்க பூஜையும், பிப்.2-ஆம் தேதி கலச பிரதிஷ்டையுடன் யாக சாலை பூஜையும் நடைபெறவுள்ளன. இதையடுத்து, வருகிற பிப்.6-ஆம் தேதி பூா்ணாஹூதியுடன் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.