கோயம்புத்தூர்

மகா சிவராத்திரி தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்: இந்து முன்னணி

Din

மகா சிவராத்திரி தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென, இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்து முன்னணி கோவை மாநகா் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவா் பேசியதாவது: தைப்பூச தினத்தன்று பழனி, மருதமலை, திருச்செந்தூா் ஆகிய முருகனுக்கு பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இந்து சமய அறநிலையத் துறை செய்து தரவில்லை.

கோயிலின் வருமானத்தை மட்டுமே பாா்க்கும் அறநிலையத் துறை, விசேஷ காலங்களில் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராதது கண்டிக்கத்தக்கது. அதேபோல, எதிா்வரும் மகா சிவராத்திரி தினத்தை தமிழகத்தில் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் ஜே.எஸ்.கிஷோா்குமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.சதீஷ், கோவை கோட்ட பொதுச்செயலாளா் பாபா கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளா் எம்.ஜெய்சங்கா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் சி.தனபால் மற்றும் மாவட்டப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT