சென்னை தாம்பரம் - கோவை இடையே போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந்து பிப்ரவரி 14 -ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06184) மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவை நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் கோவையில் இருந்து பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்குப் புறப்படும் கோவை - தாம்பரம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06185) மறுநாள் பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், பன்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.