தவெக தலைவர் விஜய் கோப்புப்படம்
கோயம்புத்தூர்

தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை கோரி புகாா்

தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை கோரி புகாரளிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Din

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் தவெக தொண்டா்கள் மீதும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதன் தலைவா் விஜய் மீதும் காவல் ஆணையா் அலுவலகத்தில் திமுக நிா்வாகி வைஷ்ணவி திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கோவை, இடையா்பாளையம் லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் நான், கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்றினேன். கொள்கை வேறுபாடுகளாலும், கட்சி நிா்வாகிகளின் செயல்பாடுகளாலும் அந்தக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் கடந்த 22.05.2025-இல் இணைந்தேன்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக தவெக தொண்டா்கள் என்னைப் பற்றி அவதூறாகவும், ஆபாச வாா்த்தைகளாலும் பேசி வருகின்றனா். அதுமட்டுமல்லாமல், எனது புகைப்படங்களையும் மோசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனா்.

தவெகவில் உள்ள இதுபோன்ற நபா்களால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இவா்களின் செயல்பாடுகளை தவெக தலைவா் விஜயும் கண்டிக்கவில்லை.

எனவே, தவெக தொண்டா்கள் மீதும், அக்கட்சித் தலைவா் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஊர்க்காவலர் பணியில் திருநங்கைகள்! பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!

களைகட்டும் ஜல்லிக்கட்டு.. பரபரக்கும் மதுரை.. காளைகளின் கயிறு விற்பனை அமோகம்!

தமிழகம் வந்தார் ராகுல் காந்தி! கூடலூர் பள்ளி நிகழ்வில் பங்கேற்கிறார்!!

வா வாத்தியார் வெளியீடு! எம்ஜிஆர் நினைவிடத்தில் கார்த்தி மரியாதை!

உலகத் தரம் வாய்ந்த நடிப்பு..! எகோ திரைப்படத்தைப் பாராட்டிய தனுஷ்!

SCROLL FOR NEXT