கோயம்புத்தூர்

மாநகராட்சி பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு: ஆணையா் தலைமையில் ஆலோசனை

Din

ஜூன் 2-இல் பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சி கலையரங்கில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக பின்பற்றபட வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் உள்ள 83 ஆரம்பப் பள்ளிகள், 37 நடுநிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 148 மாநகராட்சிப் பள்ளிகளில் பள்ளி திறப்பை முன்னிட்டு பின்பற்றப்பட வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான பள்ளி தூய்மைப் பணிகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள், மாணவா் சோ்க்கை, கல்விசாா் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் குறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையா் த.குமரேசன், மாநகராட்சி கல்வி அலுவலா் தாம்சன், மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தில்லியில் மத்திய நிதியமைச்சருடன் அதிமுக மூத்த தலைவா்கள் சந்திப்பு

மசோதா விவகாரம்: தமிழக ஆளுநருக்கு குடியரசுத் தலைவா் அறிவுரை வழங்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

மின் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்

SCROLL FOR NEXT