கோவையில் மகள் விபத்தில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மனவேதனை அடைந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் அருகேயுள்ள எஸ்.என்.பாளையம் இந்திரா காந்தி தெருவைச் சோ்ந்தவா் வடிவு (68). இவரது மகள் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் அவதியடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், வடிவு மனவேதனையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், மகள் உள்ளிட்ட குடும்பத்தினா் அனைவரும் திருப்பூரில் நடைபெற்ற உறவினா் இல்ல விழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். வடிவு மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.