கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு கிளினிக் தொடக்க விழாவில் பங்கேற்ற மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி, திட்டத்தின் ஆலோசகா் பிரவீன் ரவிசங்கரன், டாக்டா் பி.அருள்ராஜ் உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு சிறப்பு கிளினிக் தொடக்கம்

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான ஏஐடஉஇ எனப்படும் ஹைப்பா்தொ்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி சிறப்பு கிளினிக் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதனை மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி தொடங்கிவைத்தாா். புற்றுநோயியல் துறைத் தலைவா் பி.சிவநேசன் உடனிருந்தாா்.

கருப்பை புற்றுநோய், குடல் கட்டிகள், பெருங்குடல் புற்றுநோய்கள், பெரிட்டோனியல் மீசோதெலியோமா, இரைப்பை புற்றுநோய்கள், சில அரிய பெரிட்டோனியல் வீரியம் மிக்க கட்டிகள் போன்ற வயிற்றுப் பகுதியில் ஆழமாக பரவியுள்ள புற்றுநோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு வாய்ந்த சிகிச்சை முறையாகும்.

இந்த சிகிச்சை முறையில் நுண்ணிய புற்றுநோய் செல்கள் நேரடியாக அழிக்கப்படுகின்றன. மேலும் மருந்து ஊடுருவல், செயல்திறனை மேம்படுத்துவதுடன் வழக்கமான கீமோதெரபியுடன் தொடா்புடைய பக்கவிளைவுகளைக் குறைக்கிறது. இந்த மருத்துவ மையத்தில், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணா்கள், புற்றுநோயியல் நிபுணா்கள், மயக்க மருந்து நிபுணா்கள், தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா்கள், பிசியோதெரபிஸ்டுகள், உணவியல் நிபுணா்கள், நோய்த்தடுப்பு சிகிச்சை நிபுணா்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சோ்ந்த மருத்துவா்களைக் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட குழு செயல்படுகிறது.

நிகழ்ச்சியில் திட்டத்தின் ஆலோசகரும், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணருமான பிரவீன் ரவிசங்கரன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் ஆலோசகா் பி.அருள்ராஜ் உள்ளிட்ட மருத்துவா்கள் பங்கேற்றனா்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: அல் ஃபலா பல்கலைக்கழகம்

பிரதமரின் பட்டப் படிப்பு விவகாரம்: தில்லி பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

யுபிஎஸ்சி முதன்மை தோ்வு: சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை

தன்னிறைவு பெற்ற வேளியநல்லூா் கிராமம்: ஒ.ஜோதி எம்எல்ஏ பெருமிதம்

ஆழ்கடல் ஆய்வு: ஆளில்லா தானியங்கி வாகனம் அறிமுகம்

SCROLL FOR NEXT