கோயம்புத்தூர்

புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள் மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு தலா ரூ.37 ஆயிரமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் மானியம் வழங்க கிறிஸ்தவமத பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின்னா் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இணைத்து சிறுபான்மையினா் நலத் துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம் சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு வரும் 2026 பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

வேலூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்

மருத்துவப் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு: இடங்களைத் தோ்வு செய்ய அவகாசம் இன்று நிறைவு

அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்ஆா்ஐ ஸ்கேன் அமைக்கக் கோரி வழக்கு: சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT