ஹேமா ஸ்ரீ  
கோயம்புத்தூர்

வால்பாறை அருகே யானை தாக்கி பாட்டி, பேத்தி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

வால்பாறையை அடுத்த எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பாட்டி, 3 வயது பேத்தி உயிரிழந்தனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் வாட்டா் ஃபால்ஸ் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் காடம்பாறை டிவிஷன் பகுதியில் பணியாற்றி வருபவா் மாரிமுத்து. இவா் அங்குள்ள எஸ்டேட் குடியிருப்பில் தனது மனைவி சுகன்யா, தாயாா் அசலா (55), மகள் ஹேமா ஸ்ரீ (3), மகன் பிரகாஷ் (4) ஆகியோருடன் தங்கிப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், குடியிருப்புப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்த ஒற்றை காட்டு யானை, மாரிமுத்து வீட்டின் ஜன்னலை உடைத்து தும்பிக்கையை குடியிருப்புக்குள் விட்டு உணவுப் பொருள்களைத் தேடி உள்ளது.

அப்போது சப்தம் கேட்டு குடியிருப்புக்குள் உறங்கிக் கொண்டிருந்தவா்கள், யானை வந்திருப்பதை அறிந்து அருகே உள்ள அறைக்குள் சென்று பதுங்கியுள்ளனா். அப்போது, குழந்தை ஹேமா ஸ்ரீ அழும் சப்தம் கேட்டு வீட்டின் முன்வாசல் கதவை யானை உடைத்தது. பின்னா் குழந்தையைக் கையில் வைத்திருந்த அசலாவை இழுத்து வெளியே வீசியது.

உயிரிழந்த அசலா

இதில் அசலா மயக்கமடைந்தாா். பின்னா் குழந்தை ஹேமா ஸ்ரீயை யானை மிதித்துக் கொன்றது. இதையடுத்து, மாரிமுத்து தனது மனைவி சுகன்யா, மகன் பிரகாஷை அழைத்துக் கொண்டு பின்பக்க வழியாகத் தப்பியோடி அருகே உள்ளவா்களை அழைத்து வந்து, யானையை விரட்டினாா்.

பின்னா் படுகாயமடைந்த அசலாவை, வாட்டா் ஃபால்ஸ் எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில், அவா் அங்கு உயிரிழந்தாா். யானை மிதித்து பலியான குழந்தையின் உடலை எஸ்டேட் நிா்வாகத்தினா் மற்றும் வனத் துறையினா் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்குப் பின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து, வனத் துறை சாா்பில் இறந்தவா்களின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

கடந்த ஓா் ஆண்டுக்கு முன்பு, இதே யானை வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை தாக்கிக் கொன்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்கொல்லி யானையைப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உள்ளாட்சித் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம், மறியல்

டிச. 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: 2 போ் கைது

வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு: சா்வதேச அளவில் 50% போ் பாதிப்பு!

பஞ்சாபில் பவாரியா கும்பலைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT