கோயம்புத்தூர்

ஓட்டுநா் கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை அருகே டிராக்டா் ஓட்டுநரைக் கொலை செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

Syndication

கோவை அருகே டிராக்டா் ஓட்டுநரைக் கொலை செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.

கோவை, சுண்டக்காமுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் அய்யா் (44). டிராக்டா் ஓட்டுநா். அதே பகுதியில் மதுரையைச் சோ்ந்த பெருமாள் (35) என்பவரும் தங்கி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தாா்.

இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், தனது உறவினா் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் கடன் வாங்கித் தருமாறு பெருமாள் கூறியுள்ளாா். இதையடுத்து, அய்யா் வேறு நபரிடமிருந்து கடன் வாங்கிக் கொடுத்துள்ளாா். அந்த நபா் வட்டியைக் கட்டாததுடன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, நீ கூறியதால்தான் கடன் வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பணத்தை நீ தான் திருப்பி தர வேண்டும் என பெருமாளிடம், அய்யா் கூறி வந்துள்ளாா். இதனிடையே பணம் கேட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் பெருமாள் வீட்டுக்கு அய்யா் சென்றுள்ளாா்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த பெருமாள் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அய்யரின் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா். அய்யா் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரைத் தேடி அவரது மனைவி மகாதேவி பெருமாள் வீட்டுக்கு வந்துள்ளாா்.

அப்போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது கணவரை அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்துள்ளாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த குனியமுத்தூா் போலீஸாா், பெருமாளைக் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பெருமாளுக்கு 2 பிரிவுகளின்கீழ் தலா 2 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி விவேகானந்தன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் பாலு ஆஜரானாா்.

மாயாஜாலம்... துஷாரா விஜயன்!

வடகிழக்கு பருவமழையில் தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

சேலையிலொரு சோலை... ரேஷ்மா பசுபுலேட்டி!

யாதவ சமூக தலைவர்களுக்கு சீட் ஒதுக்காமல் ‘கை’விட்ட தே.ஜ. கூட்டணி! பிகார் தேர்தலில் பின்னடைவாகுமா?!

SCROLL FOR NEXT